ETV Bharat / briefs

மகளிர் டி20 சேலஞ்ச்: சூப்பர்நோவாஸ் பேட்டிங்! - Harmanpreet Kaur

சூப்பர்நோவாஸ் அணிக்கு எதிரான இன்றைய மகளிர் டி20 சேலஞ்ச் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற டிரயல் பிளேசர்ஸ் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது.

மகளிர் டி20 சேலஞ்ச்: சூப்பர்நோவாஸ் பேட்டிங்!
author img

By

Published : May 6, 2019, 7:50 PM IST

ஆடவர் ஐபிஎல் கிரிக்கெட் பாணியில், மகளிருக்கான டி20 கிரிக்கெட் சேலஞ்ச் தொடர் இன்று ஜெய்ப்பூரில் தொடங்கியது. சூப்பர்நோவாஸ், டிரயல் பிளேசர்ஸ், வெலாசிட்டி ஆகிய அணிகள் இந்தத் தொடரில் பங்கேற்கின்றன. ரவுண்ட் ராபின் முறையில் நடைபெறும் இந்தத் தொடரில் முதலிரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதி சுற்றுக்கு முன்னேறும்.

இதைத்தொடர்ந்து, இன்று தொடங்கப்பட்ட தொடரின் முதல் போட்டியில் ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான சூப்பர்நோவாஸ் அணி, ஸ்மிரிதி மந்தானா தலைமையிலான டிரயல் பிளேசர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில், டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் முதலில் பந்துவீச தீர்மானித்தார். இதைத்தொடர்ந்து, டிரயல் பிளேசர்ஸ் அணி தற்போது முதலில் பேட்டிங் செய்து வருகிறது.

டிரயல் பிளேசர்ஸ் அணி விவரம்: ஸ்மிரிதி மந்தானா (கேப்டன்), ஹேமலாதா, தீப்தி ஷர்மா, ஸ்டெபானி டெய்லர், ஹர்லீன் தியோல், சூஸி பேட்ஸ், ரவி கல்பனா (விக்கெட் கீப்பர்),ஷோபி எக்கலேஸ்டோன், ஷகிரா செல்மன், ராஜேஸ்வரி கெய்க்வாட், ஜூலன் கோஸ்வாமி

சூப்பர்நோவாஸ் அணி விவரம்: ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஜெமியா ரோட்ரிகியூஸ், பிரியா புனியா, சாம்ரி அட்டபட்டு, சோபி டிவைன், தன்யா பாட்டியா (விக்கெட் கீப்பர்), அனுஜா பாட்டீல், நதாலி ஸ்கிவர்,லீ தாகுகு, பூனம் யாதவ், ராதா யாதவ்.

இந்தத் தொடரில், நடுவரின் தீர்ப்பை சரிபார்க்கும் விதமாக ரிவ்யூ உள்ளிட்ட ஆடவருக்கான ஐபிஎல் தொடரில் பின்பற்றப்படும் விதிமுறைகளும் கடைபிடிக்கப்படுகின்றன.

Intro:Body:

Womens T20 challenge - Trialblazers vs Supernova toss

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.