உலகையே அச்சுறுத்தி வரும் கோவிட்-19 இந்தியாவில் தீவிரமாக பரவி வருகிறது. அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர மத்திய மாநில அரசுகள் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன்.
ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் தொழிற்சாலைகள், சிறு குறு நடுத்தர வணிகங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
இதன் காரணமாக, வணிக நடவடிக்கைகள் முழுமையாக முடங்கிப்போய், நாட்டில் பல்வேறு பிரிவுகள் பொருளாதார ரீதியாக நலிவடைந்துள்ளனர்.
இதனிடையே, 144 தடை அமுலில் உள்ள நிலையில் மத்திய அரசு தனியார் நிதி நிறுவனங்களோ அரசோ மகளிர் சுய உதவி குழுக்களிடம் கடன் தவணையை மூன்று மாதங்களுக்கு வசூலிக்கக்கூடாது வசூல் செய்யக்கூடாது என ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியது.
ஆனால், நிதி நிறுவனங்கள் கடன் தவணைகளைக் கேட்டு தொல்லைத் தருவதாக இந்தியா முழுவதும் பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் இயங்கி வரும் மகளிர் சுயஉதவி குழு பெண்களிடம் கடன்தொகையை திரும்பச் செலுத்தக்கோரி தனியார் நிதிநிறுவனங்கள் கட்டாயப்படுத்தி வருவதாக அறிய முடிகிறது. இதனை கண்டித்து ஆங்காங்கே போராட்டம் வெடித்து வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இயங்கிவரும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் அரசு சொல்லும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு தவணைக் கட்டச் சொல்லி கட்டாயப்படுத்திவரும் தனியார் நிதி நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கவன ஈர்ப்பு போரட்டம் நடத்தியுள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த மகளிர் சுயுஉதவிக் குழுவைச் சேர்ந்த பெண்கள்,"எங்களது வாழ்வாதாரத்தை உறுதிசெய்ய சுய உதவிக்குழுக்கள் மூலமாக கடனைப்பெற்று சிறுகுறுத் தொழில் செய்து வந்தோம். அதன் மூலமாக தான் எங்கள் குடும்பத் தேவைகளையும் பூர்த்தி செய்துகொண்டு வந்தோம்.
தற்போது, கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால் எங்களால் தொழிலில் ஈடுபட முடியவில்லை.
நாள்தோறும் மிகுந்த சிரமத்திற்கு நடுவிலேயே நாளை தள்ளிக்கொண்டிருக்கிறோம்.
இந்த சூழலில் பெல் ஸ்டார், ஸ்கோப், எல்.என்.டி போன்ற சில தனியார் நிதிநிறுவனங்கள் அரசு சொல்லும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு வேலை இல்லாமல் சாப்பாட்டிற்கே கஷ்டப்படும் எங்களிடம் பணத்தை கட்டவேண்டும் என கட்டாய வசூலில் இறங்கியுள்ளது.
பெண்கள் கரோனா ஊரடங்கு தடை உள்ளவரை தனியார் நிறுவனங்கள் கடன் வட்டித் தொகையை ரத்து செய்து, தவணை தொகையினை செலுத்தும் கால அவகாசத்தை அதிகப்படுத்த வேண்டும் என அரசு அறிவிக்க வேண்டும்" என தெரிவித்தனர்.
இதையும் படிங்க :