கரோனா தொற்று காரணமாக மரணமடைந்த நரம்பியல் மருத்துவர் சைமனின் உடல் அடக்கம் செய்ய கீழ்ப்பாக்கம் மயானம் கொண்டுசெல்லப்பட்டது. அப்போது, உடலை அடக்கம் செய்ய அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஆம்புலன்ஸ் மீது தாக்குதல் நடத்தினர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளைத் தடுக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, என்பது குறித்து தமிழ்நாடு அரசு விளக்கமளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கரோனா தொற்றினால் மரணமடைபவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் விதிமுறைகளைத் தாக்கல்செய்ய தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
கரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்யும் விதிமுறைகளைத் தாக்கல்செய்ய உத்தரவு - tamilnadu govt
சென்னை: கரோனா தொற்றால் மரணமடைபவர்களின் உடலை அடக்கம் செய்வது தொடர்பாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் வகுத்துள்ள விதிமுறைகளைத் தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
![கரோனாவால் இறப்பவர்களின் உடலை அடக்கம் செய்யும் விதிமுறைகளைத் தாக்கல்செய்ய உத்தரவு chennai highcourt](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-03:16:39:1594201599-tn-che-04-symonhercules-script-7204624-08072020151538-0807f-1594201538-784.jpeg?imwidth=3840)