ETV Bharat / briefs

களைகட்டும் மொய் விருந்தின் பின்னணி என்ன?

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஆடி, ஆவணி மாதம் வந்து விட்டால் ஒரே கொண்டாட்டம்தான். மொய் விருந்திற்கான நாள் நெருங்கியதை உற்சாகத்துடன் வரவேற்கும் ஊர் பொதுமக்கள், அதனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விருந்து உபசரிப்பாளர் என்று மொத்தத்தில் டெல்டா மாவட்டமே களைகட்டி வருகிறது.

moi virunth
author img

By

Published : Jun 30, 2019, 8:16 PM IST

மொய் விருந்தின் சிறப்பே அனைவருக்கும் வயிறார உணவு கொடுப்பதுதான். ஊர் மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சாதி, மதமின்றி ஒரு இலையில் ஒன்றிணைக்கும் திருவிழாவாக பார்க்கப்படும் நாளே மொய் விருந்து. தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி, புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி, கீரமங்கலம், ஆவணம், வடகாடு உள்ளிட்ட இடங்களில் வெகு விமர்சையாக காலங்காலமாக விருந்தை திருவிழாவாக கொண்டாடி வருகிறார்கள் மக்கள். இந்த நாளை ஆவலாக எதிர்பார்க்கும் விருந்து உபசரிப்பாளர் ஒரு பக்கமும், அதனை உற்சாகத்துடன் வரவேற்கும் பொதுமக்கள் ஒரு பக்கமும் இருக்க ஊரே திருவிழா நிகழ்வில் களைகட்டி இருக்கிறது.

விருந்து ஆடி மாதம் தொடங்கி, ஆவணி வரை நடைபெறும். இரண்டு மாதம் ஊரே சாப்பாடு, கறிச்சோற்றால் நிறைந்திருக்கும். காலை 8 மணிக்கே தொடங்கும் விருந்து, மதியம் 4 மணிக்குள் முடிந்துவிடும். 12 மணிக்கு இலையில் பரிமாறப்படும் சாப்பாடு மாலை 4 மணிக்குள் சுத்தமாகிவிடும். ஊர் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து சாப்பிடும் உணவின் ருசியே தனித்துவமானது. அதிலும் அவ்விருந்தில் வைக்கப்படும் கறிகுழம்பை ருசிக்கவே ஒரு தனி கூட்டம் இருக்கும். விருந்தில் எவர் வேண்டுமானாலும் சாப்பிடலாம். இவர்தான் சாப்பிட வரவேண்டும் என்ற விதிமுறை கிடையாது.

மொய் விருந்து
மொய் விருந்து

மொய் விருந்து எப்படி தொடங்கியது?

ஏதேனும் நல்ல நாள், பெரு நாள் திருமணம், துக்க நிகழ்வுகளில் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் பணம் இல்லாமல் தவிக்கும் போது உதவுவதற்காக உருவாக்கப்பட்டது தான் மொய் விருந்து. ஆனால் நாளடைவில் மொய் விருந்தாக உருவெடுத்து திருவிழா போல் மாறியது. முன்பெல்லாம் 50, 100 என்றே தொடங்கும் மொய் தற்போது 500, 1000 ஆக உயர்ந்திருக்கிறது. மொய் விருந்திற்கு வரி இல்லை என்பதால் கோடிகளில் புரளுகிறது இத்திருவிழா. இதனை வைத்து நல்ல முறையில் பயன்படுத்தி வாழ்வில் முன்னுக்கு வந்தவர்களும் உள்ளனர். பணத்தை பார்த்த ஆசையில் அதனை பரிகொடுத்தவர்களும் உள்ளனர். மொய் விருந்தில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு.

மொய் விருந்தின் நன்மை!

மொய் விருந்தினால் இரண்டு மாதத்திற்கு இடைவிடாது உணவு நிச்சயம். இரண்டு மாதங்கள் சமையல் செய்பவர் தொடங்கி, பத்திரிக்கை பிரிண்ட் அடிப்பவர் வரை பலரின் தொழில் செய்பவர்களுக்கும் லாபம் உண்டு. வருடா வருடம் விருந்து நடத்துபவர் இம்மாதத்தை எதிர்கொண்டு காத்திருப்பர். சுவையான உணவு, ருசியான சாப்பாடு, வயிறு நிறைந்து மனது நிறைந்து வாழ்த்தும் உள்ளத்தின் மனதையும் கட்டாயம் வெல்வர்.

கறிச்சோறுடன் மொய் விருந்து
கறிச்சோறுடன் மொய் விருந்து

பயனில்லாத மொய் விருந்தா?

நன்மை இருக்குமானால் அதில் கெட்டதும் கூடவே இருக்கும், அதில் மொய் விருந்து மட்டும் தப்பிவிடுமா என்ன? ஒருவர் 5 வருடத்திற்கு ஒரு முறை மொய் விருந்தை நடத்துவார். அதில் முதன் முதலாக 100 ரூபாய் மொய் எழுதியிருந்தால், அடுத்த வருடம் புது நடை என்று குறிப்பிட்டு மேலும் 100 ரூபாயை எழுதுவர். இம்மொய் விருந்தின் விதிமுறையை காலம்காலமாக இது போன்றே பின்பற்றுகின்றனர்.

இவ்விருந்தினால் பலருக்கு வெட்டுக்குத்து ஏற்பட்டு உயிரிழந்தோர் கணக்கும் இங்குண்டு. சோற்றில் ஆரம்பமாகும் பிரச்னை கறியின் அளவு குறைந்திருக்கிறது என்று முடிவாகி அது இறுதியில் மோதலாக மாறும். விருந்திற்கு வந்து சாப்பிட்டுவிட்டு, மொய் வைக்காமல் சென்றால் வீட்டிற்கு தேடியே ஆள் வந்துவிடும். மொய் வைக்கவில்லை என்றால் அதை விட பெரிய அவமானம் இருக்காது என்று நினைப்பவரும் உண்டு.

கோடிகள் புரளும் மொய் விருந்து
கோடிகள் புரளும் மொய் விருந்து

இந்த அவமானத்தால் தற்கொலை செய்து கொண்டவர்களும் உண்டு. ஊர் மத்தியில் வைத்து அவமானப்படுத்தவும் தயங்கமாட்டார்கள். மொய் விருந்து, ஒருவரை மேலே உயர்த்துவதற்கும் யோசிக்காது. அதே சமயம் அவரை ஒன்றும் இல்லாத ஆண்டியாக்கவும் தயங்காது. குடும்ப பிரச்னைகளை தீர்ப்பதற்காக தொடங்கிய மொய் விருந்து தற்போது பணம், வட்டியில்லா கடன் பெற்றுக்கொள்வதாக உருவெடுத்திருக்கிறது.

விளை நிலங்கள்
விளை நிலங்கள்

மொய் விருந்து சரியா!

மொய் விருந்தின் நோக்கம் சரியாக இருந்தாலும், அதனை அளிப்பவரின் நோக்கமும், பாகுபாடு இல்லாமல் இருந்தால் எல்லாம் சரியாகவே நடைபெறும். இந்த வருடம் புதுக்கோட்டை, கீரமங்கலத்தில் தொடங்கிய மொய் விருந்து பலருக்கும் பயனுள்ளதாகவே ஆரம்பமாகி இருக்கிறது. முதல் நாளே நல்ல வரவேற்பு என்று விருந்தினர் தரப்பு கூறியிருக்கிறது. கஜா புயலின் பாதிப்பால், முன்பெல்லாம் தனியாக விருந்து வைத்தோர் இந்த வருடம் 10பேர் சேர்ந்து ஒரு விருந்தாக கொடுத்துள்ளனர். கோடிகள் புரளும் இவ்விருந்தின் நோக்கம் விளை நிலங்கள் செழிப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே. விளை நிலங்கள் செழித்து, மக்கள் மனதும், வயிறும் நிறைந்து வாழ்த்து பெறவே இவ்விருந்தை திருவிழாவாக நடத்துகிறார்கள் டெல்டா வாசிகள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.