ETV Bharat / briefs

அமராவதி ஆற்றில் மூழ்கி வெல்டிங் தொழிலாளி உயிரிழப்பு - போலீசார் விசாரணை

திருப்பூர்: போடியைச் சேர்ந்த வெல்டிங் தொழிலாளி தாராபுரம் அமராவதி ஆற்றில் குளிக்கச் சென்றபோது, நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Welding worker dies after drowning in Amaravati River - Police are investigating

author img

By

Published : Jun 21, 2020, 11:31 AM IST

Updated : Jun 21, 2020, 1:15 PM IST

திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-ஒட்டன்சத்திரம் செல்லும் புறவழிச்சாலை வழியில் அமராவதி ஆறு உள்ளது. இங்குள்ள அமராவதி ஆற்றில் நேற்று (சனிக்கிழமை) போடியைச் சேர்ந்த மனோகரன் மகன் ரஞ்சித்குமார் (23), இவரது மனைவி கல்பனா ( 20) இருவரும் ஆற்றில் குளிக்கச் சென்றனர்.

அப்போது ரஞ்சித் குமார் ஆழமான பகுதிக்குச் சென்று குளித்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அவர் எதிர்பாராத விதமாக சேற்றில் சிக்கி நீரில் மூழ்கினார்.

அவரது மனைவி அப்பகுதியில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த நபர்களை அழைத்து காப்பாற்றும்படி கதறினார். ஆனால், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.

அங்கிருந்த நபர்கள் தாராபுரம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கிய ரஞ்சித் குமாரை ஒரு மணி நேரம் போராடி சடலமாக மீட்டனர்.

இதனைத் தொடர்ந்து உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் உடலை அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து தாராபுரம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

விசாரணையில் ரஞ்சித்குமார் கல்பனா இருவரும் சில ஆண்டுகளுக்கு முன்பாக காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கின்றனர். பின், திருப்பூர் மாவட்டம் அவிநாசி வாஷிங்டன் நகர்ப் பகுதியில் ரஞ்சித் குமார், வெல்டிங் வேலை பார்த்து வந்ததாகவும், கரோனா வைரஸ் பரவி வருவதால், தனது மனைவியுடன் போடியில் உள்ள தனது தந்தை வீட்டிற்கு செல்வதற்காக ரஞ்சித் குமார் தாராபுரம் பேருந்து நிலையம் வந்ததாகவும் தெரிகிறது.

அங்கிருந்து கையில் காசு இல்லாததால் நடந்தே போடிக்குச் செல்ல முடிவெடுத்துள்ளனர். இடையில் தாராபுரம் அமராவதி ஆற்றைக் கடக்கும் பொழுது தண்ணீரைப் பார்த்து, குளித்து விட்டுச் செல்வதற்கு இருவரும் முடிவெடுத்து அமராவதி ஆற்றில் இறங்கிய போது இச்சம்பவம் நடைபெற்றதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கடந்த 15ஆம் தேதி இதே பகுதியில் மகேந்திரன் என்ற இளைஞர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தார். கடந்த 6 நாட்களுக்குள் அமராவதி ஆற்றில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் தாராபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Last Updated : Jun 21, 2020, 1:15 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.