ETV Bharat / briefs

கொடிவேரி அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

author img

By

Published : Apr 22, 2021, 10:55 PM IST

ஈரோடு: கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி, அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களுக்கு முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

Water opening for first go irrigation from Kodiveri dam

ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகேயுள்ள கொடிவேரி தடுப்பணை. பாசன வாய்க்கால்கள் மூலம் 24 ஆயிரத்து 504 ஏக்கர் விளைநிலங்கள் நேரடி பாசனம் பெற்று வருகிறது. இந்நிலையில், ஒவ்வொரு ஆண்டும் கொடிவேரி தடுப்பணையிலிருந்து பிப்ரவரி மாதம், முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பது வழக்கம்.

இந்தாண்டு தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் நடைபெற்று வந்த கான்கிரீட் தளம் அமைக்கும் பணியினால் தண்ணீர் திறப்பு ஒத்திவைக்கப்பட்டது.

தற்போது கான்கிரீட் தளம் அமைக்கும் பணிகள் 35 விழுக்காடு முடிவுற்ற நிலையில் தடப்பள்ளி அரக்கன்கோட்டை வாய்க்கால்களில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்கவேண்டும் என கொடிவேரி அணை பாசன விவசாயிகள் தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து, தமிழ்நாடு அரசு தேர்தல் விதிமுறைகள் அமுலில் உள்ள நிலையில் விதிமுறைகளுக்கு உட்பட்டு பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவு வழங்கியது.

அதனடிப்படையில், பொதுப்பணித்துறை அலுவலர்கள் பாசன விவசாயிகள் முன்னிலையில் கொடிவேரி தடுப்பணையிலிருந்து தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்கால்களுக்கு முதல் போக நஞ்சை சாகுபடிக்கு 120 நாள்கள் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கொடிவேரி அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு
கொடிவேரி அணையிலிருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு

முதற்கட்டமாக தடப்பள்ளி வாய்க்காலுக்கு விநாடிக்கு 200 கனஅடியும் அரக்கன்கோட்டை பாசன வாய்க்காலுக்கு விநாடிக்கு 100 கனஅடியும் திறக்கப்பட்டுள்ளது.

பாசனத்திற்கு திறக்கப்பட்ட நீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. முதல்போக சாகுபடி முடிவுற்ற பின்னர், கான்கிரீட் தளம் அமைக்கும் மீண்டும் பணிகள் தொடங்கப்படும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மேலும் தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால்களில் அதிகளவு ஏற்படும் தண்ணீர் திருட்டை தடுக்கவேண்டும் என கொடிவேரி பாசன விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.