ETV Bharat / briefs

அமெரிக்கா, இந்தியாவில் கரோனா குறைவதற்கான சாத்தியக்கூறு தெரியவில்லை - ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் - அமெரிக்கா, இந்தியா

ஹைதராபாத்: கரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்கா, பிரேசில் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வைரஸ் தொற்று பரவல் குறைவதற்கான சாத்திக்கூறுகள் தெரியவில்லை என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. அதன் சமீபத்திய தகவல்களின்படி, உலகளவில் மூன்று நாடுகளும் 60 விழுக்காடுக்கும் அதிகமான கரோனா பாதிப்புகளை கொண்டுள்ளன.

அமெரிக்கா, இந்தியாவில் கரோனா குறைவதற்கான சாத்தியக்கூறு தெரியவில்லை- ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம்

author img

By

Published : Jul 9, 2020, 11:31 PM IST

அமெரிக்காவில் தினந்தோறும் சுமார் 59ஆயிரம் பேர் கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுகின்றனர். இந்த இக்கட்டான சூழலில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்று அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

பிரேசிலில் தினந்தோறும் சுமார் 45 ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தென்னாப்பிரிக்காவிலும் இந்த வைரஸ் வேகமாக பரவிவருகிறது. அந்நாட்டில் சராசரியாக தினமும் ஒன்பது ஆயிரம் பேர் கரோனாவால் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து அந்நாட்டின் சுகாதார அலுவலர் ஒருவர் கூறுகையில், சுமார் 15 லட்சம் கல்லறைகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. கல்லறைக்குச் செல்லாமல் தங்களை பாதுகாத்துக்கொள்வது பொதுமக்களின் பொறுப்பாகும் என்று கூறினார்.

கரோனாவால் புதிதாக பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை வீழ்ச்சியடைய, அதன் பெருகும் விகிதம் ஒன்றுக்கு கீழே இருக்க வேண்டும். இந்தியாவில் வைரஸ் பரவுவதன் உண்மையான அளவு தெரியவில்லை என்றும், அதிகளவில் மக்கள்தொகை நாடு, அதிகமாக பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

அமெரிக்காவில், உறுதிப்படுத்தப்பட்ட கரோனா தொற்று எண்ணிக்கை 30 லட்சத்தை கடந்துவிட்டது . அதாவது ஒவ்வொரு 100 பேரில் கிட்டத்தட்ட ஒருவர் பாதிக்கப்பட்டவர் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இறந்தவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்திற்கும் அதிகமாகும்.

அமெரிக்காவில் வைரஸ் அச்சுறுத்தல் இருந்தபோதிலும், பள்ளிகளை மீண்டும் திறப்பதில் அதிபர் டிரம்ப் உறுதியாக இருக்கிறார், பள்ளி வட்டாரங்கள் இலையுதிர்காலத்தில் தங்கள் மாணவர்களை மீண்டும் அழைத்து வராவிட்டால் கூட்டாட்சி நிதி வழங்கப்படாது என்று அச்சுறுத்திவருகிறார்.

டிரம்பின் அழுத்தம் இருந்தபோதிலும், நியூயார்க் நகரம் அதன் மாணவர்களில் பெரும்பாலோர் வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று நாட்கள் மட்டுமே வகுப்பறைகளுக்குத் அழைப்பதாகவும் , இடையில் ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்படும் என்றும் அறிவித்தது.

"ஒரு சமூகமாக நமது முன்னுரிமைகள் என்ன என்பதைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும், வேறு சில விஷயங்கள் காத்திருக்க வேண்டியிருக்கும்" என்று பாஸ்டன் பல்கலைக்கழகத்தின் தொற்று நோயியல் நிபுணர் ஹெலன் ஜென்கின்ஸ் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசியாவில், மூன்று மாத ஊரடங்கிற்கு பின்னர், ரிசார்ட் தீவான பாலி மீண்டும் திறக்கப்பட்டது, செப்டம்பர் மாதத்தில் வெளிநாட்டு வருகை மீண்டும் தொடங்குவதற்கு முன்பு உள்ளூர் மக்களும் சிக்கித் தவிக்கும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் பொது நடவடிக்கைகளை மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.