விழுப்புரம் மாவட்டம் காணை அருகே உள்ளது குப்பம் கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த கிராமத்தில் மினி டேங்க் அமைத்து குடிநீர் வசதி ஏற்படுத்தித் தர வேண்டும், கழிவுநீர் செல்வதற்கு கால்வாய் அமைத்து தர வேண்டும் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி பலமுறை உயர் அலுவலர்களிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் நேற்று (ஆகஸ்ட் 4) திடீரென குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.
அப்போது அடிப்படை வசதி உடனடியாக செய்து தரவேண்டும் எனவும் வலியுறுத்தினார்.பின்னர் அவர்களுடன் பேச்சுவார்த்தை செய்த அலுவலர்கள் மனு அளித்து விட்டுச் செல்லுங்கள் விரைவில் அடிப்படை வசதிகள் செய்து தரப்படும் என்று உறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.