பெரம்பலூர் மாவட்டம் பிலிமிசை கிராமத்தைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவர் சென்னை கோயம்பேடு சந்தையில் கூலி தொழில் செய்து வருகிறார். இவரது மகள் இலக்கியா (14) தனியார் பள்ளி ஒன்றில் 7ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
சிறுவயதில் இருந்தே கராத்தே மீது அதிக ஈடுபாடு கொண்ட இலக்கியா, மே 3ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை மலேசியாவில் நடைபெற்ற சர்வதேச கராத்தே ஓபன் சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டு தங்கப்பதக்கங்களை வென்றார்.
இதையடுத்து, 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் பிரிவில் கலந்துகொண்ட இலக்கியா இரண்டு தங்கப்பதக்கங்களை வென்று அசத்தினார். கராத்தேவில் தங்கம் வென்ற தங்கமங்கையை ஊக்கப்படுத்தும் விதமாக, அகில இந்திய மக்கள் செல்வன் நடிகர் விஜய்சேதுபதி ரசிகர் மன்ற செயலாளர் குமரன், சென்னை மாவட்ட தலைவர் தேவா ஆகியோர் இலக்கியாவை நேரில் சந்தித்து, தங்கச் செயின் வழங்கி பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர்.