ETV Bharat / briefs

பித்துப் பிடித்து காதலித்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்யவில்லை - வனிதா விஜயகுமார் - லேட்டஸ்ட் சினிமா செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவருடன் படுக்கையறையில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார்
வனிதா விஜயகுமார்
author img

By

Published : Jun 29, 2020, 1:24 PM IST

Updated : Jun 29, 2020, 5:31 PM IST

வனிதா விஜயகுமார் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு மூன்றாவது திருமணம் செய்துகொண்டார்.

திருமணம் முடிந்த கையோடு இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், நெட்டிசன்கள் கடுமையாக அதை விமர்சித்தனர்.

இந்நிலையில் விமர்சித்தவர்களை வெறுப்பேற்றும் வகையில், மீண்டும் நடிகை வனிதா விஜயகுமார் தனது கணவருடன் படுக்கையறையில் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

ஒருவருக்கு, ஒருவர் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்ட அவர், 'ரொமான்ஸ் பண்ண தெரியாதவர்களுக்கு அதிக முத்தங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார். இதைக் கண்ட நெட்டிசன்கள் வழக்கம்போல் அவரை விளாசினர்.

மேலும் வனிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "திருமணம் என்பது இரண்டு இதயங்களின் உண்மையான உணர்வு. நிபந்தனையற்ற காதலின் சங்கமம். எனது பெயரைக் கெடுக்கவும், அவதூறு பரப்பவும், என்னிடமிருந்து பணத்தைக் பறிக்க நினைப்பவர்களும், சுத்தமாக அக்கறையில்லாதவர்கள். வன்மத்தை உருவாக்க முயல்கின்றனர்.

நானும், பீட்டர் பாலும் கடவுள் முன்னிலையில் ஒன்று சேர்ந்துள்ளோம். ஆனால், நான் கிறிஸ்தவ மதத்துக்கு மாறவில்லை என்றால், அந்த எண்ணமும் இல்லையென்றதால், நாங்கள் எங்கள் திருமணத்தைப் பதிவுசெய்யவில்லை.

நாங்கள் ஒருவரை ஒருவர் பித்துப் பிடித்து காதலித்ததைத் தவிர வேறெந்த குற்றத்தையும் செய்யவில்லை. நாங்கள் இருவரும் சந்தோஷமாக இருப்போம். தயவு செய்து எந்தக் குற்றச்சாட்டுகளையும் நம்பாதீர்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வனிதா விஜயகுமார் அறிக்கை

Last Updated : Jun 29, 2020, 5:31 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.