ETV Bharat / briefs

ஊரடங்கை பயன்படுத்தி 8 வழி சாலை பணிகளை தொடங்குவதா ? - கனிமொழி எம்.பி கண்டனம்! - C Kanimozhi MP condemned

தூத்துக்குடி : எட்டுவழிச சாலை விஷயத்தில் விவசாயிகளின் உணர்வை புரிந்துகொள்ளாமல் மத்திய, மாநில அரசுகள் செயல்பட்டுவருகின்றன என தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி குற்றச்சாட்டி உள்ளார்.

கோவிட்-19 ஊரடங்கை பயன்படுத்தி 8 வழி சாலை பணிகளை தொடங்குவதா ? - கனிமொழி எம்.பி கண்டனம்!
utilizing Covid-19 curfew TN govt starting 8 way road works - Kanimozhi MP condemned
author img

By

Published : Jun 8, 2020, 1:51 AM IST

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே லிங்கம்பட்டியில் திமுக சார்பில் திமுக தலைவர் கருணாநிதி 97ஆவது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது.அம்மாவட்டத்தின் வடக்கு மாவட்ட செயலாளர் கீதா ஜீவன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திமுக மகளிரணி செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி கலந்துகொண்டு ஏழை மக்கள் 750 பேருக்கு அரிசி பைகள், மளிகை பொருள்களை வழங்கினார்.

இதையடுத்து நாகம்பட்டி, பசுவந்தனை, வானரமுட்டி, காயத்தாறு உள்ளிட்ட பல இடங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் இசைக் கலைஞர்கள், நலிவடைந்தோருக்கு கனிமொழி எம்.பி. உதவிப் பொருள்களை வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "விவசாயிகள் தொடர்ந்து எதிர்த்து கொண்டிருக்கிற திட்டங்களை எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழ்நாடு அரசுதான் சொந்த ஆதாயம் பொருட்டு கொண்டு வருவதில் மிகவும் மும்முரமாக உள்ளது.

குறிப்பாக, எட்டுவழி சாலை திட்டத்தை எதிர்த்து பல்வேறு எதிர்ப்புகளுக்கு பின்னரும் மக்களின் உணர்வுகளை புரிந்துகொள்ளாமல் கரோனோ ஊரடங்கு காலத்தில் போராட வழியில்லை என்பதை உணர்ந்து, இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு இத்திட்டத்தை நிறைவேற்ற முயல்கிறது.

கோவிட்-19 ஊரடங்கை பயன்படுத்தி 8 வழி சாலை பணிகளை தொடங்குவதா ? - கனிமொழி எம்.பி கண்டனம்!
மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி

மக்களுக்கு விரோதமான மிக மோசமான இந்த முன்னெடுப்புகளை அரசு துணிந்து செயல்படுத்த முனைகிறது. இதனை அரசு உடனடியாக கைவிட வேண்டும்.

தங்களின் அடிப்படை வாழ்வாதாரமே பாதிக்கப்படும்போது மக்கள் அமைதி காக்க மாட்டார்கள். இதனை எதிர்த்து, ஒன்று திரண்டு வந்து வீதியில் நின்று போராடுவார்கள். இதனால், கரோனோ தொற்றுநோய் பரவுவதற்கு இன்னும் அதிகமான வாய்ப்பே உள்ளது. மத்திய, மாநில அரசுகள் விவசாயிகள் மற்றும் மக்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல்தான் தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன.

மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அறிவித்தாலும் பொருளாதாரத்தை சீர்படுத்த கூடிய எந்த அறிவிப்பும் வரவில்லை. தொழிற்சாலை நிறுவனங்கள், விவசாயிகள், சிறு, குறு தொழில் நடத்துவோர் என யாருக்கும் மகிழ்ச்சியையும், எதிர்காலம் பற்றிய நம்பிக்கை தரக்கூடிய எந்தவித திட்டங்களையும் இதுவரை மத்திய அரசு அறிவிக்கவில்லை என்பதுதான் உண்மை.

தனியார் மருத்துவமனைகள் கரோனோ சிகிச்சை அளிப்பதற்கு கட்டணம் நிர்ணயம் செய்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ரூ.7500 முதல் ரூ.22,000 ஆயிரம் வரை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. ஆனால் பல தனியார் மருத்துவமனைகள் அதை மீறி, அதிக கட்டணம் வசூல் செய்து வருகின்றன. கரோனோ சிகிச்சைக்காக லட்சக்கணக்கில் பணம் வசூலித்து வருகின்றனர். தமிழ்நாடு அரசு ஒரு அறிவிப்பை செய்து விட்டு நிறுத்துவதோடு, அரசின் கடமை முடியவில்லை. அது நிறைவேற்றப்படுகிறதா? என்பதை பார்க்க வேண்டியது அரசின் கடமையாகும்.

வெறும் 2, 3 நாள்கள் சிகிச்சை பெற்றவர்கள் கூட லட்சக்கணக்கில் பணம் கட்டவேண்டிய சூழ்நிலைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர். அரசிடம் போதுமான படுக்கை வசதி ஏதுமில்லை. எனவேதான், தனியார் மருத்துவமனையை பயன்படுத்த வேண்டிய சூழ்நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். இந்தளவிற்கு கட்டணம் வசூலிப்பதை அரசு பார்த்து கொண்டு சும்மா இருக்கக்கூடாது. தகுந்த நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.