திருவள்ளூர் நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜென் சாலையில் உள்ள மளிகைக் கடை பூட்டை உடைத்த அடையாளம் தெரியாத நபர்கள் 5 ஆயிரம் ரூபாயை திருடிச் சென்றனர்.
மேலும், கூல்ட்ரிங்ஸ் கடை, பேக்கரி கடையின் பூட்டை உடைத்து திருடிச் சென்றனர். அதேபோல் விஎம் நகரில் உள்ள மளிகைக் கடையின் பூட்டை உடைத்து வெள்ளி நாணயம், 2ஆயிரம் ரூபாய் உள்ளிட்டவைகளை திருடிச் சென்றனர். தொடர்ந்து, சூப்பர் மார்க்கெட்டின் பூட்டை உடைத்து அதில் வைத்திருந்த 2 ஆயிரம் ரூபாய் சில்லரை காசுகளை அள்ளிச் சென்றுள்ளனர்.
அதேபோல் பூங்கா நகரில் உள்ள மளிகை கடை, பிரவுசிங் சென்டரில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரொக்கப் பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். ஒரே நாளில் 13 கடைகளின் பூட்டை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
இதையடுத்து, இச்சபவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், குற்றவாளிகளைத் தேடிவருகின்றனர். மேலும், இந்தக் கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு நேரங்களில் காவல் துறையினர் ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டுமெனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.