ETV Bharat / briefs

சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும்! - Ramasamy Chief Engineer

சென்னை : முழு ஊரடங்கு காலத்தில் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

Uninterrupted supply of drinking water to people of Chennai is assured

author img

By

Published : Jun 18, 2020, 3:18 PM IST

உலகளாவிய அச்சுறுத்தலாக மாறியிருக்கும் கோவிட்-19 பாதிப்பு இந்தியாவில் தீவிரமடைந்துவருகிறது. குறிப்பாக, தமிழ்நாட்டில் மூன்றாம் கட்ட அபாய நிலையை எட்டியிருக்கும் கரோனா வைரஸ் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது.

சிவப்பு மண்டலங்களாக அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சியுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் கட்டுப்பாட்டை மீறி பாதிப்புகள் உயர்ந்துகொண்டே வருதால், வருகின்ற ஜூன் 19 முதல் 30 வரை முழு ஊரடங்கு உத்தரவு தளர்வுகளின்றி அமலுக்கு வருமென தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இன்று (ஜூன் 18) நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலுக்கு வர உள்ள நிலையில் சென்னை மக்களின் குடிநீர் போன்ற அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சென்னை குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி இதற்கு பதிலளிக்கும் விதமாக, "எப்போதும் போல சென்னை பெருநகரில் குடிநீர் வாரியம் மற்றும் கழிவு நீர் சுத்திகரிப்பு பணிகளை மேற்கொள்ள 500 ஊழியர்கள் தேவையான இயந்திரங்களுடன் பணியில் இருப்பார்கள். கரோனா அச்சுறுத்தலில் இருந்து பாதுகாத்துக்கொள்ளும் விதமாக உரிய பாதுகாப்பு கவசங்களுடன் பணியில் இருப்பார்கள்.

மேலும், முழு ஊரங்கில் மக்களுக்கு பாதிப்பின்றி குடிநீர் வழங்கவும் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. எனவே, மக்கள் அது குறித்து அச்சம் கொள்ளத் தேவையில்லை" என தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.