ETV Bharat / briefs

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது - இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர்

திருவள்ளூர்: சோழவரம் பகுதியில் தொடர் இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்ட இருவரைக் காவல் துறையினர் கைதுசெய்தனர்.

இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட இருவர் கைது

author img

By

Published : Jun 24, 2020, 4:05 PM IST

திருவள்ளூர் மாவட்டம் சோழவரத்தை அடுத்த ஜனப்பன்சத்திரம் கூட்டுச்சாலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக தீவிர வாகனச் சோதனையில் சோழவரம் காவல் துறையினர் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த இருசக்கர வாகனம் ஒன்றை காவல் துறையினர் மடக்கி விசாரித்தபோது, அதில் இருந்த இருவரும் முன்னுக்குப்பின் முரணாகப் பதில் கூறியதால் வாகனத்தின் ஆவணங்களைக் கேட்டுள்ளனர். அப்போது அது திருட்டு வாகனம் என இருவரும் ஒப்புக்கொண்டனர்.

இதனையடுத்து இருவரையும் காவல் துறையினர் கைதுசெய்து தீவிர விசாரணை செய்ததில், அவர்கள் இருவரும் சோழவரம் அல்லிமேடு கிராமத்தைச் சேர்ந்த செல்வம், சரவணன் என்பது தெரியவந்தது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சோழவரம், கும்மிடிபூண்டி, கவரைப்பேட்டை, பொன்னேரி உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டுவந்ததும் தெரியவந்தது.

இதனையடுத்து அவர்கள் திருடி பதுக்கிவைத்திருந்த 12 இருசக்கர வாகனங்களை காவல் துறையினர் மீட்டனர். பின்னர் செல்வம், சரவணன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மீட்கப்பட்ட இருசக்கர வாகனங்களை அவற்றின் உரிமையாளர்களிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாக சரக காவல் உதவிக் கண்காணிப்பாளர் பவன்குமார் தெரிவித்தார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.