ETV Bharat / briefs

மாணவர்கள் விசா விவகாரம்: பல்டி அடித்த டிரம்ப் - கரோனா அச்சுறுத்தல்

வாஷிங்டன்: கரோனா அச்சுறுத்தல் காரணமாக  ஆன்லைன் வகுப்புகளை தேர்வுசெய்த வெளிநாட்டு மாணவர்களின், விசாக்களை நீக்கம் செய்யும் சர்ச்சைக்குரிய உத்தரவை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரத்து செய்துள்ளார்.

மாணவர்கள் விசா விவகாரம்:  பல்டி அடித்த டிரம்ப்

author img

By

Published : Jul 16, 2020, 12:31 AM IST

கரோனா நெருக்கடியின்போது, ஆன்லைன் படிப்புகளை மட்டுமே வழங்கும் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், நாட்டில் தங்குவதற்குத் தடை விதிக்குமாறு அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை (DHS) குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்திற்கு (ICE) உத்தரவிட்டது.

நாடு முழுவதும் மாநிலங்களில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு அதிகரித்துவரும் நேரத்தில், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மீண்டும் திறக்க அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழியாக அரசின் முடிவுகள் இருப்பதாக, அந்நாட்டின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களால் விமர்சிக்கப்பட்டது.

டிரம்ப் நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட மாணவர்களின் விசா ரத்து நடவடிக்கைக்கு எதிராக , அந்நாட்டின் பதினேழு மாநிலங்கள், மாசசூசெட்ஸில் உள்ள அமெரிக்க மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தன, அமெரிக்காவில் கரோனா தொற்றால் பலி எண்ணிக்கை லட்சத்தை தாண்டியுள்ள இந்த நெருக்கடியான சூழலில் "வெளிநாட்டு மாணவர்களை வெளியேற்றுவதற்கான கொடூரமான, சட்டவிரோத நடவடிக்கையை அரசு மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டது.

வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் மற்றும் அமெரிக்க அரசியல் விவகாரங்களுக்கான துணை செயலாளர் டேவிட் ஹேல் ஆகியோருக்கு இடையிலான ஆலோசனைகளின்போது, அமெரிக்காவின் எஃப் 1 விசா தொடர்பான நிலை கவலையளிப்பதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு மாணவர்களின் சிறந்த நலன்களை கருத்தில்கொண்டு முடிவு எடுக்கப்படும் என்று அமெரிக்க தரப்பு கூறப்பட்டதாகத் தெரிகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.