நாகை மாவட்டம் சீர்காழி தாலுகாவில் உள்ள லாரி, கார் உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், சாலை வரியை ரத்து செய்யக்கோரியும், காலாவதியான சுங்கச்சாவடிகளை அகற்ற கோரியும், கரோனாவால் வேலையின்றி தவிக்கும் ஓட்டுநர்களுக்கு அரசு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.
சீர்காழி புறவழிச்சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள், கார்களை சாலையோரம் நிறுத்தி தங்களது எதிர்ப்பை அரசுக்கு தெரிவித்துள்ளனர். மேலும் அரசு செவி சாய்க்கவில்லை என்றால் அடுத்தகட்டமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளனர்.