கரோனா வைரஸ் தொற்றுக்கு தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,091 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மாநிலத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் இன்று 806 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் திருச்சியில் ஏழு பேருக்கு ஒரே நாளில் இன்று தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இவர்கள் திருச்சி பொன்மலைப்பட்டி, கொட்டப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்துள்ளது.
ஏற்கனவே 88 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில், தற்போது கரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ளது.
இதில் 70 பேர் ஏற்கனவே பூரண குணமடைந்து வீடு திரும்பிவிட்டனர். மீதமுள்ள 25 பேர் திருச்சி அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.