திருச்சி வனச்சரகத்தின் எல்லைக்குட்பட்ட திருவரம்பூா், சோழமாதேவி முதல் கீழக்குறிச்சி உய்யக்கொண்டான் வாய்க்கால் கரையில் வனத்துறைக்கு சொந்தமான 15 தேக்கு மரங்களை அடையாளம் தெரியாத நபர்கள் வெட்டி கடத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக வனத்துறையினர் வழக்குப்பதிவு செய்து மரங்களை வெட்டியவர்களை தேடிவந்தனர். இந்நிலையில், தியாகு (55), தினேஷ் (28), சுப்பிரமணியன் (42) ஆகியோர் தேக்கு மரங்களை வெட்டி மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
திருச்சி வனச்சரகா் குணசேகரன் தலைமையில் வனவர் செல்வகுமாா், வனவர் கோடீஸ்வரன், வனக்காப்பாளர் சுரேஷ் குமாா் ஆகியோர் இவர்களை கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
இதையும் படிங்க:திண்டுக்கல்லில் 1 ஏக்கருக்கு கஞ்சா செடி... தீயில் இரையாக்கிய வனத்துறை!