கரோனா வைரஸ் காரணமாக வீட்டிலிருக்கும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்களது நேரத்தை குடும்பத்துடன் செலவு செய்து வருகின்றனர்.
இதற்கிடையில் நடிகைகள் பலரும் வீட்டிலிருந்தபடியே எவ்வாறு தங்களை அழகுபடுத்திக் கொள்ள வேண்டும் என்பது குறித்து காணொலியாக வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் வீட்டில் இருக்கும் தீபிகா படுகோனே தனது சருமத்தை பாதுகாப்பதற்காக சில்வர் ஷீட் மாஸ்க் அணிந்துள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
வீக் எண்ட்டிற்காக காத்திருக்கிறேன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ள புகைப்படம் தீபிகா ரசிகர்கள் மத்தியில் வைரலாகிறது.
நடிகை தீபிகா படுகோனே, தான் தினந்தோறும் செய்யும் வேலைகள் குறித்த தகவலை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.