திருவள்ளூர் நகராட்சி ஆணையராக சந்தானம் என்பவர் பணிபுரிந்துவருகிறார். இவர் கடந்த மார்ச் மாதம் முதல் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வைரஸ் (தீநுண்மி) பரவலைத் தடுக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுவந்தார்.
இந்த நிலையில் சனிக்கிழமை அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டது. அப்போது கண்டறிதல் சோதனை மேற்கொண்டதில் அவருக்கு தீநுண்மி தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டது.
இதைத்தொடர்ந்து நகராட்சி அலுவலகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டது. மேலும் நகராட்சி அலுவலகத்தின் பணியாளர்கள் தொற்று கண்டறிதல் சோதனை செய்த பின்னர் வேலையில் ஈடுபடும் படியும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் மாவட்டத்தின் சார்பதிவாளர் அலுவலகத்தில் பணியாற்றிவந்த சார் பதிவாளருக்கு தீநுண்மி தொற்று உறுதிசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.