இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "புதுச்சேரியில் ஒவ்வொரு நாளும் 5000த்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் சோதனை செய்யப்படுகிறது. அதில் 492 பேருக்கு கூடுதலாக தொற்று ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மேலும் 24 மணி நேரத்தில் 6 பேர் கரோனாவால் இறந்துள்ளனர். இதுவரை புதுச்சேரியில், 21,913 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
அனைத்து அலுவலர்களும் மருத்துவ பணியாளர்களும் கோவிட் தடுப்பு பணிகளில், தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். இதற்கு மக்கள் தரப்பில் முழு ஒத்துழைப்பு இருக்கவேண்டும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.