திருவள்ளூரில் உள்ள டாஸ்மாக் மேலாளர் அலுவலகம் முன்பு டாஸ்மாக் ஊழியர்கள் சங்கம் சார்பில் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது டாஸ்மாக் ஊழியர்கள் கூறுகையில், "தமிழ்நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில் டாஸ்மாக் மதுபான சில்லரை விற்பனை கடைகளிலும் தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதால் ஊழியர்களுக்கு கிருமி நாசினி, முகக்கவசம், கையுறை, தெர்மல் இயந்திரம் போன்ற பாதுகாப்பு கருவிகளை வழங்கிட வேண்டும்.
இ.எஸ்.ஐ. திட்டத்தில் சேர்த்திட வேண்டும். மதுபாட்டில்களில் உள்ள பழைய விலையை அகற்றிவிட்டு புதிய விலை லேபிளை ஒட்ட வேண்டும். நீண்ட நாள்களாக தேங்கியுள்ள அட்டை பெட்டிகளை உடனடியாக அப்புறப்படுத்தி நோய் தொற்றிலிருந்து காத்திட வேண்டும்.
மாவட்ட நிர்வாகமும், தமிழ்நாடு அரசும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று வலியுறுத்தினர்.