தமிழ்நாடு வக்ஃபு வாரிய உறுப்பினர்களுக்கான தேர்தலில் வாக்களிக்க, தமிழ்நாட்டைச் சார்ந்த இஸ்லாமிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், இஸ்லாமிய சட்டப்பேரவை உறுப்பினர்கள், முன்னாள் பார் கவுன்சில் உறுப்பினர்கள், மற்றும் முத்தவல்லிகள் பிரிவுகள் ஆகியோருக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது.
இவ்வாக்காளர் பட்டியல், தேர்தல் அலுவலகம், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை, தலைமைச் செயலகம், தமிழ்நாடு வக்ஃபு வாரியம், அனைத்து மண்டல வக்ஃபு கண்காணிப்பாளர்களின் அலுவலகங்கள் ஆகியவற்றின் அதிகாரப்பூர்வ வலைதளங்களில் வெளியிடப்படுகிறது.
தேர்தல் நடத்துவதற்கான கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும் என்றும், தேர்தல் பற்றிய அறிவிக்கை தமிழ்நாடு அரசிதழில் தேர்தல் அலுவலரால் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.