தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதன்படி நேற்று (ஜூலை 12) மட்டும் மாநிலம் முழுவதும் நான்காயிரத்து 244 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 470ஆக அதிகரித்துள்ளது.
கரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வந்தவர்களில் நேற்று (ஜூலை 12) மூன்றாயிரத்து 671 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதன்மூலம் தொற்று பாதிப்பில் இருந்து மீண்டு, வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை 89 ஆயிரத்து 532ஆக அதிகரித்துள்ளது.
கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 12) ஒரே நாளில் 68 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 966 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம்:
அரியலூர் - 513;
செங்கல்பட்டு - 8,120;
சென்னை - 77,338;
கோவை - 1,261;
கடலூர் - 1,526;
தருமபுரி - 241;
திண்டுக்கல் - 787;
ஈரோடு - 389;
கள்ளக்குறிச்சி- 1,791;
காஞ்சிபுரம் - 3,606;
கன்னியாகுமரி - 1,306;
கரூர் - 201;
கிருஷ்ணகிரி - 253;
மதுரை - 6,078;
நாகப்பட்டினம் - 347;
நாமக்கல் - 174;
நீலகிரி - 183;
பெரம்பலூர் - 175;
புதுக்கோட்டை - 615;
ராமநாதபுரம் - 1,849;
ராணிப்பேட்டை - 1,509;
சேலம் - 1,867;
சிவகங்கை - 862;
தென்காசி - 683;
தஞ்சாவூர் - 687;
தேனி - 1,729;
திருப்பத்தூர் - 414;
திருவள்ளூர் - 6,655;
திருவண்ணாமலை - 3,076;
திருவாரூர் - 708;
தூத்துக்குடி- 2,661;
திருநெல்வேலி - 1,758;
திருப்பூர் - 297;
திருச்சி - 1,504;
வேலூர் - 2,772;
விழுப்புரம் - 1,459;
விருதுநகர் - 2,073
கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 574
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 407
ரயில் மூலம் வந்தவர்கள்: 422