இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "உலகளாவிய அச்சுறுத்தலான கோவிட்-19 பரவல் தடுப்பு ஊரடங்கால் கடும் பொருளாதார வீழ்ச்சியை சந்தித்திருக்கும் தொழில்துறையினரின் நெருக்கடியை கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நீட்டிக்கும் முடிவை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது.
ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்யும் காலம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் ஜூன் 30ஆம் தேதியுடன் நிறைவடைந்த நிலையில் தற்போது ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை கால அவகாசத்தை நீட்டித்து அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, டெல்லியில் நடைபெற்ற 40ஆவது ஜிஎஸ்டி கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.