இது தொடர்பாக அவர் இன்று விடுத்துள்ள அறிக்கையில், "ஊரடங்கு கால மின் கட்டணத்தைக் குறைக்கக் கோரியும் , குறிப்பாக, முந்தைய மாதத்துக்குச் செலுத்திய மின் கட்டணத்தைக் குறைப்பதற்குப் பதில் அந்தத் தொகைக்குரிய யூனிட்டுகளை கழிக்க வலியுறுத்தியும், அப்படிக் குறைக்கப்பட்ட மின்கட்டணத்தை எளிய மாதத் தவணைகளில் செலுத்த மக்களுக்கு அனுமதி வழங்கக் கோரியும் வரும் ஜூலை 21ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அன்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் அறிவிப்புக்கிணங்க விழுப்புரம் மத்திய மாவட்டம் ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள வீடுகளில் கழகத்தினர், பொதுமக்கள் அனைவரும் வீடுகளின் முன்பு கறுப்புக் கொடி ஏற்றுவதோடு, கண்டன முழக்கங்களை எழுப்ப வேண்டும்.
கழக நிர்வாகிகள் இந்தப் போராட்டத்துக்கு வலிமை சேர்க்கும் விதத்தில் துண்டறிக்கைகள், சுவரொட்டிகள், சமூக வலைதளங்கள் மூலம் மக்களிடம் இந்தப் போராட்டத்தின் நோக்கத்தைக் கொண்டுசேர்க்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.