ETV Bharat / briefs

கவரிங் நகையை கஷ்டப்பட்டு திருடிய கொள்ளையர்கள்... பெண் படுகாயம்! - Chain Snatching

கிருஷ்ணகிரி: ஓசூர் தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்றுகொண்டிருந்த பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர்கள், நான்கு பவுன் தங்க சங்கிலி என நினைத்து கவரிங் நகையை கொள்ளையடித்துள்ளனர்.

கவரிங் நகையை திருடிய கொள்ளையர்கள்... பெண் படுகாயம்
author img

By

Published : Jun 21, 2019, 11:50 PM IST

தருமபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியைச் சேர்ந்த தர்மன், தேவப்பிரியா என்ற தம்பதிகளுக்கு இரண்டு வயது பெண் குழந்தை உள்ளது. தர்மன் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தேவப்பிரியாவின் தாயார் வீட்டிற்கு தனது குடும்பத்தினரோடு இருசக்கர வாகனத்தில் சென்றார்.

அப்போது, அவர் ஓசூர் நோக்கி சென்றபோது, பல்சர் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று நபர்கள், தேவப்பிரியாவின் கழுத்தில் இருந்த நான்கு பவுன் தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். இதனால், நிலைதடுமாறிய இருவரும் வாகனத்தில் இருந்து கீழே வீழ்ந்தனர். பின்னர், தேவப்பிரியாவின் நான்கு பவுன் தங்கச் சங்கிலியை அவர்கள் பறித்துச் சென்றதில், அவரது முகம், கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

கவரிங் நகையை திருடிய கொள்ளையர்கள்

இதைத்தொடர்ந்து, அவ்வழியாக சென்ற நபர்கள், இவர்களை உடனடியாக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது தேவப்பிரியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தேவப்பரியா அணிந்திருந்த நகை, கவரிங் நகை என்பது தெரியவந்துள்ளது. இருப்பினும் இருசக்கர வாகனத்தில் வந்து வழிப்பறியில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களைக் காவல்துறையினர் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

Intro:கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் தேசிய நெடுஞ்சாலை வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தில் கணவனுடன் சென்று கொண்டிருந்த - பெண்ணிடம் 4 பவுன் தங்க சங்கிலி வழிப்பறிBody:
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே தர்மபுரி மாவட்டம் காரியமங்கலம் பகுதியை சேர்ந்த தர்மன் மற்றும் தேவப்பிரியா என்கின்ற தம்பதிகள் தன் இரண்டு வயது கை குழந்தையுடன் தங்களது இருசக்கர வாகனத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தேவப்பிரியாவின் தாயார் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
அப்போது ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி வனப்பகுதியில் ஒட்டியுள்ள பெங்களூர் - கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்த போது பின் தொடர்ந்து பல்சர் வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத மூன்று மர்ம நபர்கள் கணவனுடன் இருசக்கர வாகனத்தில் அமர்ந்து கொண்டிருந்த தேவப்பிரியாவின் கழுத்தில் இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு சென்றனர். அப்போது தேவப்பிரிய தடுமாறி இருச்சகர வாகனத்தில் இழுத்து கீழே விழுந்து படுகாயம் அடைந்தார்.
அச்சமயம் அவ்வழியாக வந்த நபர்கள், உடனடியாக கீழே விழுந்து படுகாயம் அடைந்த தேவ பிரியாவை 108 ஆம்புலென்ஸ் மூலம் ஓசூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில் தேவப்பரிய அணிந்த வந்த நகைகளில் பறி போன நகை கவரிங் நகை என தெரிய வந்துள்ளது. இருப்பினும் இருசக்கர வாகனத்தில் வந்து வழிபரியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.