"சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டுள்ள 'தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2019' - 'தேர்தல் நடத்தும் (சட்டத்திருத்தம்) விதிமுறை, 2020' ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி, இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் & தேர்தல் ஆணையர்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
மத்திய அரசின் நடவடிக்கையில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் எனவும் , தேர்தல் நடத்தும் சட்டத்திருத்தம் விதிமுறைகளில் மாற்றம் கொண்டுவருவது தொடர்பாக அனைத்து கட்சிகளிடமும் ஆலோசனை கேட்க வேண்டும் எனவும் அவர் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.