தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கின் காரணமாக, நாளை(ஏப்.25) மற்றும் மே 2 ஆகிய இரண்டு தேதிகளில் இயக்கப்படும் சிறப்பு விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக, தென்னக ரயில்வே நிர்வாக அறிவித்துள்ளது.
அதன்படி,
1.வண்டி எண். 06025 - சென்னை எழும்பூரிலிருந்து காலை 06:35 மணிக்கு புதுச்சேரி வரை இயக்கப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில், 2021 ஏப்ரல் 25, மே 2 ஆகிய இரண்டு தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
2. வண்டி எண். 06026 - புதுச்சேரியிலிருந்து மதியம் 03:35 மணிக்கு சென்னை எழும்பூர் வரை இயக்கப்படும் மெமு சிறப்பு விரைவு ரயில், 2021 ஏப்ரல் 25, மே 2 ஆகிய இரண்டு தேதிகளில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என, தென்னக ரயில்வே நிர்வாக சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.