ETV Bharat / briefs

உணர்ச்சியுடன் ட்வீட் செய்த தவான்

author img

By

Published : Jun 20, 2019, 7:28 AM IST

தனக்காக பிரார்த்தனை செய்த ரசிகர்கள், சக வீரர்களுக்கு நன்றி என இந்திய வீரர் ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமாக ட்வீட் செய்துள்ளார்.

ஷிகர் தவான் ட்வீட்

இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர் தவான் உலகக்கோப்பையில் இருந்து காயம் காரணமாக விலகியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், பெட் கம்மின்ஸ் வீசிய பந்து இவரது இடது கையின் கட்டை விரலை தாக்கியது. இருப்பினும், இந்தக் காயத்தை பொருட்படுத்தாமல் ஆடிய அவர், சதம் விளாசி அசத்தினார். இதைத்தொடர்ந்து, காயம் காரணமாக மூன்று வாரத்திற்கு ஷிகர் தவான் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுரை வழங்கினர். இதனால், பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இவருக்கு பதிலாக கே.எல்.ராகுல் தொடக்க வீரராக களமிறங்கினார்.

இந்நிலையில், காயம் காரணமாக, அவர் உலகக்கோப்பை தொடரிலிருந்து பாதியிலேயே விலகியுள்ளார். அவருக்கு பதிலாக, இளம் வீரர் ரிஷப் பந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

  • I feel emotional to announce that I will no longer be a part of #CWC19. Unfortunately, the thumb won’t recover on time. But the show must go on.. I'm grateful for all the love & support from my team mates, cricket lovers & our entire nation. Jai Hind!🙏 🇮🇳 pic.twitter.com/zx8Ihm3051

    — Shikhar Dhawan (@SDhawan25) June 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதைத்தொடர்ந்து, உலகக்கோப்பையில் இருந்து விலகுவது குறித்து ஷிகர் தவான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரசிகர்களுக்கு வீடியோ ஓன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகக்கோப்பை தொடரில் இனி விளையாட முடியாததை உருக்கமாக தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்பாராவிதமாக, எனக்கு ஏற்பட்ட காயம் குறிப்பிட்ட நேரத்தில் குணமடையவில்லை. எனக்காக ஆதரவு, பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கும், சக வீரர்களுக்கும் நன்றி. ஜெய்ஹிந்த்" என கூறியிருக்கிறார்.

Intro:Body:

Shijar dhawan

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.