திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகே பாம்பாறு வனப்பகுதிக்குள் நேற்று கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் குட்டி ஆறு பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் ரமீஷ் (23), ரித்துவான் (23), கெசல் (23), அஸ்மில் (23), முகமது செரின் (23), சினு (23), சாகின் (23), ஆகிய ஏழு பேரும் வனத் துறையின் அனுமதியின்றி அத்துமீறி பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் நுழைந்து உள்ளனர்.
நேற்று இரவு அவர்கள் அங்கு தங்கியதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் வனச்சரகர் செந்தில்குமார், வனகாப்பளர்கள் அழகுராஜா, ஜாபர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்தனர்.
அதில், இந்த ஏழு பேரும் கேரளாவில் உள்ள கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் என்பதும் அத்துமீறி வனப்பகுதிக்குள் நுழைந்ததும் தெரியவந்தது. பின்னர் இது குறித்து வனத் துறையினர் வழக்குப்பதிவு செய்து ஏழு கேரளா கல்லூரி மாணவர்களை கைதுசெய்து அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
இதையடுத்து, தலா 400 ரூபாய் அபராதம் விதித்தனர். மேலும் கல்லூரி மாணவர்கள் என்ற காரணத்தினால் வனத் துறையினர் அவர்களை எச்சரிக்கை செய்து விடுவித்தனர்.