விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி பகுதியில் 5 மாதங்களுக்கு முன்பு இரவு நேரங்களில் ஆள்கள் இல்லாத பூட்டிய 3 வீடுகளில் தொடர் திருட்டு சம்பவம் நடைபெற்றது.
இதில் 100 சவரனுக்கு மேற்பட்ட தங்க நகைகள், பணம் கொள்ளையடிக்கபட்டது. இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வன்னியம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்நிலையில் செங்கோட்டை பகுதியை சேர்ந்த அஜி என்ற அஜ்மீர் செரீப் என்ற இளைஞரை பிடித்து விசாரித்ததில் அவரிடமிருந்து 13 சவரன் தங்க நகைகள் கைப்பற்றப்பட்டது. அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திண்டுக்கல் சிறையில் காவல் துறையினர் அடைத்தனர்.
மேலும் இந்த கொள்ளை சம்பவத்திற்கு முக்கிய காரணமாக இருந்த சிவகாசியை சேர்ந்த மைதீன் என்பவர் மும்பையில் பதுங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவரை கைது செய்ய வன்னியம்பட்டி காவல் துறையினர் தீவிர முயற்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர் திருட்டு சம்பவம்; ஒருவர் கைது; மேலும் ஒருவருக்கு வலைவீச்சு! - தொடர் திருட்டு
விருதுநகர்: தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.