ETV Bharat / briefs

மெட்ரோ 2ஆம் கட்டப் பணி... போரூர் - வடபழனி போக்குவரத்து நெரிசல் குறையுமா? - கோடம்பாக்கம் பவர் ஹவுஸ்

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் முதற்கட்டமாக பவர்ஹவுஸ் முதல் போரூர் வரை ரயில் பாதை அமைக்கப்படுகிறது.

Chennai metro train second phase
Second phase of Chennai metro train
author img

By

Published : Dec 9, 2020, 7:10 PM IST

சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட நீட்டிப்புத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதன்படி, மெட்ரோ ரயிலின் இரண்டாம் கட்ட திட்டம், முதற்கட்டமாக கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் வரை அமைக்கப்படுகிறது. முன்னதாக மாதவரம் முதல் சோழிங்கநல்லூர் வழித்தடத்தில் முதற்கட்டமாக ரயில் பாதை தொடங்கப்பட திட்டமிடப்பட்டிருந்தது. பின்னர் இந்த முடிவு மாற்றப்பட்டுள்ளது.

கோடம்பாக்கம் பவர் ஹவுஸ் முதல் போரூர் வரையிலான 8 கிலோ மீட்டர் பாதையில் சாலிகிராமம், ஆவிச்சி பள்ளி, ஆழ்வார்திருநகர், வளசரவாக்கம், காரம்பாக்கம், ஆலப்பாக்கம் சந்திப்பு, போரூர் சந்திப்பு ஆகிய ரயில் நிலையங்கள் வழியில் வருகிறது.

இதற்கான கட்டுமானப் பணிகளுக்கு டெண்டர் விடுக்கப்பட்டிருந்த நிலையில், இதில் குறைந்தபட்டச தொகையை தெரிவித்திருத்திருந்த லார்சன் அண்ட் டியூபுரோ நிறுவனத்துக்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்படும் என சென்னை மெட்ரோ ரயில் அலுவளர்கள் கூறுகின்றனர்.

ஒன்பது ரயில் நிலையங்கள், அதற்கான மேம்பாலம், ரயில் பாதை அமைக்கும் பணிக்கு இந்நிறுவனம், மற்ற அனைத்து நிறுவனங்களையும் விட குறைவாக ஆயிரத்து 35 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் கோரியுள்ளது. இதற்கான சில நடைமுறைகள் நிறைவடைந்த பின் கட்டுமானப் பணிகள் தொடங்கும் என அலுவளர்கள் கூறினர்.

இந்தத் திட்டத்துக்கான கட்டுமானப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கி, மூன்று ஆண்டுகளில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் திட்டம் நிறைவடைந்து ரயில்கள் இயக்கப்பட்ட பின் இந்தப் பகுதி சாலைகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாகக் குறையும் என நம்பப்படுகிறது.

தற்போது நகரில் வாகன நெரில் மிகுந்து காணப்படும் இந்த வழித்தடத்தில் உயர்மட்ட பாலம் அமைத்து மெட்ரோ ரயில் பாதைகள் அமைப்பது சற்று சவால் நிறைந்ததாகவே பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.