திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளத்தைச் சேர்ந்தவர் நாராயண ராஜ் (34). இவர் பணகுடி பகுதியில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தமிழ் ஆசிரியராகப் பணியாற்றி வந்தார்.
இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அப்பள்ளியில் பயிலும் 10ஆம் வகுப்பு மாணவியைக் கடத்திச் சென்றதாக பணகுடி காவல் நிலையத்தில், மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அதன் பேரில் விசாரணை நடத்திய காவல் துறையினர், நாராயண ராஜையும், மாணவியையும் தேடிக் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அம்மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார். மேலும் பள்ளி மாணவியைக் கடத்திச் சென்ற நாராயண ராஜை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.