ETV Bharat / briefs

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர்களை மூன்று நாள்கள் சிபிஐ காவலில் எடுக்க நீதிமன்றம் உத்தரவு! - மதுரை உயர் நீதிமன்றம்

மதுரை: சாத்தான்குளம் கொலை வழக்கில் கைதான மூன்று காவல் துறையினரை, 3 நாள்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Sathankulam murder case: Court orders CBI to take policemen into custody for three days!
தந்தை மகன் கொலை வழக்கு
author img

By

Published : Jul 20, 2020, 9:16 PM IST

தூத்துக்குடி சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரிடம் சிபிஐ மூன்று நாள்கள் விசாரணை நடத்தியநிலையில் கொலை வழக்கில் இரண்டாவது கட்டமாக கைது செய்யப்பட்ட காவலர்களான செல்லதுரை, சாமத்துரை, வெயில்முத்து ஆகியோரை 3 நாட்கள் சிபிஐ காவலில் எடுக்க சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அனுமதியளித்து.

மேலும், இரண்டு நாள்களுக்கு பின் 3பேரின் மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தபின் வரும் 23ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மூன்று பேரையம் மீண்டும் ஆஜர்படுத்த வேண்டும் என மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்தகுமார் உத்தரவு பிறப்பித்தார்.

இதனையடுத்து மூன்று பேரையும் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனையில் மருத்துவபரிசோதனை செய்த பின்பு கோவில்பட்டி, சாத்தான்குளம் பகுதிக்குச் சென்று விசாரணை நடத்தவாய்ப்புள்ளது.

முன்னதாக சாத்தான்குளம் வழக்கு தொடர்பாக சிபிசிஐடியால் கைப்பற்றப்பட்ட கூடுதல் ஆவணங்களை தூத்துக்குடி நீதிமன்றத்தில் இருந்து மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரையும் மூன்று நாள்கள் சிபிஐ விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.