ETV Bharat / briefs

சாத்தான்குளம் கொலை வழக்கு: சிபிஐ விசாரணை

தூத்துக்குடி: சாத்தான்குளம் வியாபாரிகள் கொலை வழக்கு தொடர்பாக மூன்று பேர் கொண்ட சிபிஐ அலுவலர்கள் பென்னிக்ஸ் உறவினர்களிடம் விசாரணை நடத்தினர்.

Santhankulam Muder Case CBI Enquiry
Santhankulam Muder Case CBI Enquiry
author img

By

Published : Sep 15, 2020, 10:01 PM IST

தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த தந்தை மகன் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல் துறை விசாரணையின்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக பல்வேறு இடங்களில் போராட்டம் வெடித்தது. இதையடுத்து, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து இந்த வழக்கை விசாரணை நடத்தியது.

இந்நிலையில், முதற்கட்டமாக இந்த வழக்கை சிபிசிஐடி அலுவலர்கள் விசாரனை மேற்கொண்டனர். அதில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர்.

அதன்பின்னர், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. இதனால்,சிபிஐ அலுலர்கள் இந்த வழக்கை விசாரணை நடத்திவருகின்றனர்.

முதல் கட்டமாக இந்த விசாரணையானது வியாபாரிகள் வீட்டிலிருந்து தொடங்கப்பட்டது. இதற்கிடையில், சிபிஐ அலுவலர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டது.

தற்போது, கடந்த இரண்டு வார காலமாக மீண்டும் விசாரணை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இந்நிலையில், இன்று மூன்று பேர் கொண்ட சிபிஐ அலுவலர்கள் மீண்டும் வியாபாரிகள் வீட்டிற்கு வந்தனர்.

ஆனால், அந்த வீட்டில் யாரும் இல்லாத காரணத்தால் அக்கம்பக்கத்தினர், உறவினர்களிடம் அவர்கள் விசாரணை மேற்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, பென்னிக்ஸின் நண்பரான மணிமாறன் அலுவலத்திற்குச் சென்றனர். அங்கு அவர்கள் ஏற்கனவே அழைப்பாணை அனுப்பியிருந்த 10 பேரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.