தமிழ்நாட்டில் கரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த மார்ச் 25ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு பல தளர்வுகளுடன் வரும் 31ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகள் அந்தந்த நகராட்சி, மாநகராட்சி நிர்வாகத்தினால் தனிமைப்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் பட்டிலை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 1089 கரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் உள்ளன. இந்த பட்டியலில் கட்டுப்பாடுப்பகுதிகள் அதிகம் உள்ள மாவட்டங்களில் சேலம் முதலிடம் பிடித்துள்ளது. அதிகபட்சமாக சேலத்தில் 184 இடங்களும், சென்னையில் 158 இடங்களும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக உள்ளன.