ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாகப் பிறப்பிக்கப்பட்டுள்ள குற்ற குறிப்பாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர் சங்கம் சார்பில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அச்சங்கத்தின் மாவட்ட தலைவர் சந்தானம் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் "கரோனா பரவலைக் கருத்தில் கொள்ளாமல் வளர்ச்சித் துறையில் மேற்கொள்ளப்பட்டுவரும் பிஎம்ஏஒய், எஸ்பிஎம், ஜேஜேஎம் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க நிர்பந்திப்பதை மாவட்ட நிர்வாகம் கைவிட வேண்டும்.
பழிவாங்கும் நோக்கத்தோடு பிறப்பிக்கப்பட்ட கோவை மாவட்டத்தில் 4 ஊழியர்களின் மாவட்ட மாறுதல்களை உடனடியாக ரத்துசெய்ய வேண்டும். இணை இயக்குநர், உதவி இயக்குநர் பதவி உயர்வு ஆணையை உடனே வழங்க வேண்டும். கரோனா பரவல் தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ஊழியர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கவேண்டிய மாநில நிதிக்குழு மானியத்தை உடனடியாக விடுவிக்க வேண்டும்" என்றார்.