ETV Bharat / briefs

ரூ.1.74 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரும் பணிகள்: மாவட்ட கண்காணிப்பாளர் ஆய்வு! - புதுகோட்டையில் தூர்வாரும் பணிகள் தொடக்கம்

புதுக்கோட்டை: கல்லணை கால்வாய் கோட்டம், அக்னியாறு கோட்டங்களின் மூலம் மொத்தம் 9 பணிகள் 1லட்சத்து 74ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 94.230 கி.மீ நீளத்திற்கு நடைபெற்றுவரும் தூர்வாரும் பணிகளை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா ஆய்வுசெய்தார்.

தூர்வாரும் பணிகள் தொடக்கம்
author img

By

Published : Jun 9, 2020, 4:04 AM IST

தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகளுக்கான புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா , மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி ஆகியோர் இன்று நாகுடி பகுதிகளில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணிகளை செய்தியாளர்களுடன் சென்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சரின் அறிவுறுத்தலுக்கிணங்க சிறப்பு தூர்வாரும் பணியினை கண்காணிக்கும் வகையில் தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக பயன்படுத்தப்பட்டுவரும் ஆள் இல்லா சிறு விமானம் மூலம் அளவீடு செய்யும் தொழில்நுட்பக் கருவியின் செயல்பாடுகள் குறித்து செய்தியாளர்களுக்கு செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

பின்னர் சிறப்பு தூர்வாரும் பணி, குடிமராமத்து பணிகளைப் பற்றி புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அபூர்வா கூறியதாவது, "தமிழ்நாடு முதலமைச்சர் விவசாயிகள் பயன்பெறும் வகையில் சிறப்பு தூர்வாரும் பணிகள் என்ற உன்னத திட்டத்தை செயல்படுத்தியுள்ளார்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2020-21ஆம் ஆண்டிற்கான சிறப்பு தூர்வாரும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகிறது. அதன்படி நாகுடி பகுதியில் நடைபெற்றுவரும் சிறப்பு தூர்வாரும் பணிகள் ஆய்வு செய்யப்பட்டன.

புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்று வரும் சிறப்பு தூர்வாரும் பணியில் கல்லணை கால்வாய் கோட்டம், அக்னியாறு கோட்டங்களின் மூலம் மொத்தம் 9 பணிகள் 1லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 94.230 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதில் கல்லணை கால்வாய் கோட்டத்தில் 89.83 கி.மீ நீளத்திற்கு 1லட்சத்து 9ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் 7 பணிகளும், அக்னியாறு கோட்டத்தில் 4.40 கி.மீ நீளத்திற்கு 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 2 பணிகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. இப்பணிகளில் தற்பொழுது 64.395 கி.மீ நீளத்திற்கு தூர்வாரப்பட்டுள்ளது.

மீதமுள்ள 29.835 கி.மீ நீளத்திற்கு தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்பொழுது மாவட்டத்தில் சிறப்பு தூர்வாரும் பணிகள் 71 சதவீதம் முடிவுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆள் இல்லா சிறு விமானம் மூலம் அளவீடுகள் செய்யப்படுகின்றன” என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.