ETV Bharat / briefs

புதுக்கோட்டையில் 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருள் சிக்கியது - புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி

புதுக்கோட்டை: காரில் கடத்திவரப்பட்ட 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல்செய்த காவல் துறையினர், இதுதொடர்பாக இரண்டு பேரை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

Rs. 1.5 crore worth drugs seized in pudukottai

author img

By

Published : Jun 24, 2020, 12:16 PM IST

புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண்சக்தி குமாரை தொடர்புகொண்ட மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினர், புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி வழியாக சைலோ காரில் போதைப்பொருள் கடத்தப்படுவதாகத் தகவல் அளித்தனர்.

தகவலின் அடிப்படையில் காவல் துறையினர் சோதனை ஈடுபட்டனர். அப்போது, புதுக்கோட்டை லேனா மண்டபம் அருகே சென்றுகொண்டிருந்த சைலோ காரை மறித்து சோதனை மேற்கொண்டதில், கார் முழுவதும் பண்டல் பண்டலாக 19 அட்டைப்பெட்டியில் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. காரில் வந்த ஐந்து பேரில் மூன்று பேர் தப்பி ஓடிவிட்டனர். இதனையடுத்து வாகனத்தைப் பறிமுதல்செய்த காவல் துறையினர், போதைப்பொருள் கடத்திவந்த இருவரைக் கைதுசெய்தனர்.

மேலும், பறிமுதல்செய்யப்பட்ட வாகனம், போதைப்பொருள், அதனை கடத்திய நபர் ஆகியோரை மத்திய போதைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

பறிமுதல்செய்யப்பட்ட பொருள்களின் மதிப்பு 1.5. கோடி ரூபாய் என்றும், அதனை ஆந்திராவிலிருந்து கடத்திவரப்பட்டது என்பதும் விசாரனையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொண்டு விசாரணை நடத்திவரும் காவல் துறையினர், தப்பி ஓடிய மூவரைத் தேடிவருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.