கரோனா தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அந்நோயின் அறிகுறிகளுடன் வருபவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க தேவையான உபகரணங்கள், ரோட்டரி சங்கம் மூலம் தமிழ்நாட்டில் உள்ள பல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, மன்னார்குடியில் உள்ள திருவாரூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கங்களின் சார்பில் மருத்துவ உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 5) நடைபெற்றது.
இதில், வென்டிலேட்டர்கள், n95, 3ply முகக் கவசங்கள் மருத்துவர்களுக்கான முழு உடல் கவசம் உள்ளிட்ட 5 லட்சத்து 46 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான மருத்துவ உபகரணங்கள் வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில், ரோட்டரி சங்க மாவட்ட ஆளுநர் மணிமாறன், மருத்துவமனை கண்காணிப்பாளர் விஜயகுமார், மண்டல உதவி ஆளுநர் செந்தில் குமார் உள்ளிட்ட மன்னார்குடி அனைத்து ரோட்டரி சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.