கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அடுத்துள்ள ஆசனூர் டாஸ்மாக் கடையில் பணிபுரிந்து வரும் மேற்பார்வையாளர் ராஜா, விற்பனையாளர்கள் வாசு, சந்திரசேகர் ஆகிய மூவரும் நேற்று இரவு கடையை மூடிவிட்டு வீட்டிற்குச் சென்றுள்ளனர்.
அப்போது, இரண்டு இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்த நான்கு பேர் கொண்ட கும்பல் ஊழியர்களின் கண்ணில் மிளகாய் பொடி தூவியும், கத்தியைக் காட்டி மிரட்டியும் அவர்கள் வைத்திருந்த ரூ. 2 லட்சம் பணத்தை பறித்துச் சென்றனர்.
சம்பவ இடத்தில் இருந்த மற்றொரு நபரான சக்திவேல் இதனை தடுக்க முயன்றபோது அவரை வெட்டிவிட்டு கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இச்சம்பவம் குறித்து எடைக்கல் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.