திருவள்ளூர் மாவட்டம், ஆரணி அடுத்த புதுவாயல் ஊராட்சிக்குட்பட்ட ஏரியில் மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் மூன்று முறை போராட்டம் நடத்தினர். இதையடுத்து, புதுவாயல் ஊராட்சி மன்றம் சார்பாக மண் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்றத்தில் தலைவர், துணைத்தலைவர் வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் முன்னிலையில் ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "இங்கு மண் எடுப்பதால் விவசாயம், குடிநீர் முற்றிலும் பாதிக்கப்படும். ஏற்கனவே மூன்று முறை போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆகையால் இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" எனத் தெரிவித்தனர்.