இது குறித்து தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர் கூட்டமைப்பு நிறுவனர் கார்த்திக் அனுப்பியுள்ள மனுவில், "கடந்த 2019-ஆம் ஆண்டு 92 கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் தரமற்றதாக அறிவித்தது. ஆனால் அவற்றின் பெயர்களை வெளியிடவில்லை. அந்தப் பெயர்களை வெளியிட வேண்டும் என்று ஆசிரியர் கூட்டமைப்பு கொடுத்த அழுத்தத்தின் பேரில் தமிழ்நாட்டின் அனைத்து கல்லூரிகளின் அறிக்கைகளை அண்ணா பல்கலைக்கழகம் தனது வலைதளத்தில் பதிவேற்றம் செய்தது.
அந்தத் தகவல்களை கொண்டு சில அமைப்புகள் ஒரு பட்டியலை தயாரித்து வெளியிட்டன. அந்தப் பட்டியல் 2019 வருடத்திற்கானது. தற்போது 2020 ஆம் வருடத்திற்கான பட்டியலோ, அல்லது அறிக்கைகளோ இதுவரை வெளியிடப்படவில்லை.
ஆனால் 2019 பட்டியலை தேதி குறிப்பிடாமல், தற்போது சிலர் பகிர்ந்து வருவது மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தக் குழப்பத்தை களையும் வகையில் அண்ணா பல்கலைக்கழகம் இந்த வருடத்திற்கான அங்கீகாரம் பட்டியல் அனைத்தையும் உடனே வெளியிட வேண்டும்.
மேலும் 'இபாக்ஸ் காலேஜ்' என்று கூறி தமிழ்நாட்டில் உள்ள நான்கு பொறியியல் கல்லூரிகள் விளம்பரப்படுத்தபடுகின்றன. இபாக்ஸ் என்பது பதிவு இல்லாத போலி நிறுவனம் ஆகும். இது சம்மந்தமாக பிரதமர், முதலமைச்சர் அலுவலகங்களுக்கு ஏற்கனவே புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
இபாக்ஸ் என்ற நிறுவனம் கல்லூரிகளை நிர்வகிக்கும் அமைப்பாக மாறியது? எப்படி என்றால் 'ஸூம் காலேஜ்', கூகுள் கிளாஸ் ரூம் காலேஜ்', 'மொடல் காலேஜ்' என்று விளம்பரப்படுத்தி கொள்ளலாமா? அப்படி கூறி மாணவர்களை ஏமாற்றலாமா? ஆசிரியர்கள் எண்ணிக்கையை குறைத்து, ஊதியத்தை குறைத்து, ஆசிரியர்கள் உழைப்பையும் உறிஞ்சி ஏமாற்றலாமா? இது மிக பெரிய ஒரு மோசடி.
'இபாக்ஸ் காலேஜ்', 'இபாக்ஸ் ஸ்கூல்' என்ற ஒரு போலி நிறுவனத்தின் பெயரில் நடக்கும் மோசடிகளை உடனே அரசு தடுக்க வேண்டும். அண்ணா பல்கலைக்கழகம் 'இபாக்ஸ் காலேஜ்' என அறிவிக்கபட்டிருக்கும் நான்கு கல்லூரிகள் மேல் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்க வேண்டும்.
தமிழ்நாட்டின் 500 க்கும் மேற்பட்ட தனியார் பொறியியல் கல்லூரிகளை பொறுத்தமட்டில் மிக மோசமான நிலையில் உள்ள சிலவற்றை தவிர்த்து, 90 விழுக்காடு பொறியியல் கல்லூரிகள் காப்பாற்ற பட வேண்டும்” என அதில் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கந்த சஷ்டி கவசம் படித்த விஜயகாந்த்