ETV Bharat / briefs

கரோனாவால் வாழ்வாதாரம் பாதிப்பு - தனியார் விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை! - கரோனா ஊரடங்கு

ஈரோடு: அரசு விதிமுறைகள், கட்டுப்பாடுகளுடன் விடுதிகள் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று விடுதி உரிமையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Request for private hotel owners in Erode

author img

By

Published : Jul 9, 2020, 2:43 AM IST

துணி, மஞ்சள் உள்ளிட்ட பல்வேறு தொழில்களின் கேந்திரமாக விளங்கும் ஈரோடு மாவட்டம் தமிழ்நாடு அளவில் முக்கிய தொழில் நகரமாக உள்ளது. தொழில் நகரமான ஈரோடு, அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

ஈரோட்டிற்கு வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களிலிருந்து தொழில் நிமித்தம் வருபவர்கள் அதிகளவில் தனியார் விடுதிகளில் தங்கி தங்களது தேவைகளைப் பூர்த்தி செய்வது வழக்கமாக இருந்தது.

இந்நிலையில் கரோனா ஊரடங்கு காரணமாக அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தனியார் விடுதி உரிமையாளர்கள் செய்தியாளர்களை சந்தித்து கூறுகையில், "கரோனா பரவல் காரணமாக நோய்த்தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதியிலிருந்து இன்று வரை சுமார் 110 நாள்களுக்கும் மேலாக தனியார் தங்கும் விடுதிகள் மூடப்பட்டுள்ளது.

இதனால், தனியார் விடுதியின் வாடகை வருவாயை மட்டும் நம்பியுள்ளவர்கள் எவ்வித வருவாய் இன்றி விடுதிகளுக்கு வாடகை, மின்கட்டணம், வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய கடன், வட்டித் தொகை, விடுதிகளின் பராமரிப்புச் செலவுகளை ஈடுகட்ட முடியாமல் திணறி வருகின்றனர்.

அதேபோல், தனியார் விடுதிகளை நம்பி அதில் பணியாற்றி வந்த இரண்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் எவ்வித வருவாயுமின்றி மிகவும் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

எனவே ஏனைய தொழில்களுக்கு வழங்கப்பட்டுள்ள தளர்வுகளைப் போல் தனியார் தங்கும் விடுதிகளுக்கும் தளர்வுகளை அறிவித்து அதிகபட்ச கட்டுப்பாடுகள், அரசு விதிமுறைகளுடன் செயல்படுவதற்கு அனுமதியளித்திட வேண்டும்.

தனியார் விடுதி வாடகைக் கட்டணங்களை மட்டும் நம்பி வாழ்ந்து வருபவர்களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கிடுவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும், தனியார் தங்கும் விடுதிகளில் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கையுடன் 50 விழுக்காடு அறைகளையாவது செயல்பட அனுமதித்து பாதிக்கப்பட்டுள்ள தங்களுக்கு வருவாய்க்கான வாய்ப்பினை வழங்கிட வேண்டும்" என்றனர்.

இதையும் படிங்க: உரிமம் இல்லாமல் செயல்பட்ட 'மூலிகை மைசூர்பா' கடைக்குச் சீல் - உணவுப் பாதுகாப்புத் துறை அதிரடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.