அந்த மனுவில், “கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தேர்ச்சி பெற்று அவர்களில் 8 ஆயிரத்து 888 காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டார்கள்.
இந்நிலையில் மேலும் 2020 - 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்ஜெட் கூட்டத்தொடரில் 10 ஆயிரத்திற்கும் மேற்பபட்ட காவலர் காலிப்பணிடங்களை நிரப்ப உள்ளதாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார். தற்போதுள்ள கரோனா சூழ்நிலையை கருத்தில் கொண்டு இனிவரும் காலங்களில் காவல் துறை தேர்வு மற்றும் உடற்தகுதி தேர்வு நடத்த முடியுமா என்பது கேள்விகுறியாக உள்ளது.
எனவே கடந்த முறை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் தேர்வில் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சி பெற்று காலி பணியிடம் போக முடியாமல் உள்ளவர்களில் வயது அடிப்படையிலும் இறுதிக்கட்டத்தில் உள்ளவர்கள் அதிகம் இருப்பதால் 2019ஆம் ஆண்டு மொத்த மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ச்சியடைந்து காலி பணியிடங்கள் போக மீதமுள்ள அனைவரையும் அறிவிக்கப்பட்ட காவலர் காலிபணியிடங்களில் நிரப்ப முடியும்
காவலராக தேர்வு செய்யப்பட்டால் பயிற்சி பெறும் 6 மாத காலமும் எங்களுக்கு எந்தவித ஊதியமும் வழங்கவேண்டாம் எனவும் தற்போது கரோனா சூழ்நிலையில் தமிழ்நாடு அரசுக்கு நிதி நெருக்கடியில் பயனுள்ளதாக இருக்கும் . கடந்த ஆண்டு காலி பணியிடம் போக பின்தங்கியவர்களுக்கு அப்போதைய தேர்தலை கருத்தில் கொண்டு காவல் துறையில் பணி வழங்கப்பட்டது. அதேபோல் தற்போது கரோனா காலத்தையும் தேர்தலை மையப்படுத்தியும் பணி வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
காவலர் பணியில் சேர்ந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற நோக்கில் வருடா வருடம் தேர்வு எழுதி தோற்காமல் பின் தங்கி இருக்கும் இளைஞர்களின் சூழ்நிலையை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டிருந்தனர். இந்த மனுவை, கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஶ்ரீஅபிநவ் ஆகியோரிடம் அளித்தனர்.