ETV Bharat / briefs

மீண்டும் குறைந்த முட்டை  விலை! - Egg rate reduced

நாமக்கல்: முட்டை விலை இன்று (ஜூலை 4) மீண்டும் 20 காசுகள் சரிந்து 3 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பிற மண்டலங்களில் விற்பனை சரிந்து முட்டைகள் தேங்கியதால் விலை குறைந்தது என கோழிப் பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

Egg Rate reduced
Egg Rate reduced
author img

By

Published : Jul 4, 2020, 4:44 PM IST

Updated : Jul 4, 2020, 4:55 PM IST

நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 3 ரூபாய் 70 காசுகளிலிருந்து 20 காசுகள் குறைந்து 3 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது. கடந்த மாதம் முட்டை ஒன்றின் பண்ணை கொள்முதல் விலை 4 ரூபாய் 60 காசுகள் வரை விற்கப்பட்டது.

இந்நிலையில், முட்டை நுகர்வு குறைந்து விற்பனை சரிவடைந்தது. அதிக அளவு தேக்கம் ஏற்பட்டதால் விற்பனையை அதிகரிக்கும் நோக்கில், கடந்த மாதம் 4 ரூபாய் 60 காசுகளிலிருந்து 90 காசுகள் குறைந்து 3 ரூபாய் 70 காசுகளுக்கு விற்கப்பட்டு வந்தது. கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக அதே விலை நீடித்த நிலையில், இன்று (ஜூலை 4) மீண்டும் 20 காசுகள் குறைக்கப்பட்டு 3 ரூபாய் 50 காசுகளாக விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இது குறித்து கோழிப் பண்ணையாளர்கள் கூறும்போது, ”பிற மண்டலங்களில் முட்டை தொடர்ந்து விற்பனை குறைந்து விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்த நிலையில், பல முக்கிய மாவட்டங்களில் தொடர்ந்து பொதுமுடக்கம் காரணமாக முட்டை விற்பனை கடுமையாக குறைந்தது. முட்டை நுகர்வு குறைந்ததால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை வரும் நாட்களில் மேலும் சற்று குறைய வாய்ப்புள்ளது” என்றார்.

இதையும் படிங்க:கோழிக்கறி வாங்கினால் மாஸ்க் இலவசம் - அசத்தும் கறிக்கடைகாரர்

Last Updated : Jul 4, 2020, 4:55 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.