சென்னையில் அதிகம் பாதிப்புக்கு உள்ளான மண்டலமான ராயபுரத்தில் பொதுமக்கள் நடமாட்டமின்றி கடைத் தெருக்கள் முக்கிய சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. பழைய வண்ணாரப்பேட்டை பகுதிகளான எம்சி ரோட்டில் அனைத்து கடைகளும் மூடப்பட்டு மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடியது.
மேலும், காவல் துறையினர் ரோந்து வாகனங்களில் மூலம் ஒவ்வொரு பகுதிகளாக கண்காணித்து வருகின்றனர். அதேநேரம் தடுப்பு வளையங்களை அமைத்து வாகனங்களில் வருவோரை சோதனை செய்து கண்காணித்து வருகின்றனர். தேவையில்லாமல் இருசக்கர வாகனங்களில் வருபவர்களை எச்சரித்து வீட்டிற்கு அனுப்புகின்றனர்.
இந்நிலையில் தொற்று பரவலை தடுக்க களப்பணியாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்ட தெருக்களில் கிருமி நாசினி தெளிக்கப்படுகின்றன. முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் பொதுமக்கள் சிலர் இறைச்சி கடைகளை தேடி தெருத்தெருவாக சுற்றி வருகின்றனர் அவர்களை காவல் துறையினர் எச்சரித்து வீட்டிற்கு செல்லும்படி அறிவுறுத்துகின்றனர்.