கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி மாவட்டத்தின் கரோனா பாதிப்பு நிலவரங்களை தெரிவித்தார்.
அப்போது, வேலை காரணமாக சென்னைக்கு சென்று வருபவர்களின் எண்ணிக்கை சற்று அதிகளவில் உள்ளதால் தற்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும், ஏற்கனவே 25 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் கூடுதல் சோதனைச்சாவடிகள் அமைத்து கண்காணிப்பு தீவிரப்படுத்தபடும் எனவும் கூறினார்.
மேலும் நாளை முதல் இ- பாஸ் பெறாதவர்கள் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என தெரிவித்த அவர்,கட்டணம் செலுத்த சொல்லி வற்புறுத்தும் தனியார் பள்ளிகள் குறித்து புகார்கள் வந்தால் அதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிததார்.
இதையும் படிங்க:பெருந்துறை அரசு மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!