ராஜஸ்தானின் பிரபலமான சன்வலியா சேத் பிரக்தியா கோயில் கரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து மூடப்பட்டது.
இந்தக் கோயிலுக்கு கடந்த வெள்ளிக்கிழமையன்று பெயர் வெளியிடாமல் ஒரு பக்தர் ஒரு கோடியே 38 லட்ச ரூபாய் நன்கொடையாக கொடுத்துள்ளார்.
இதுவே, “இக்கோயிலுக்கு இதுவரை கிடைத்த மிகப்பெரிய நன்கொடை" என்று கன்ஹையதாஸ் என்பவர் கூறினார்.
மேலும், இந்தக் கோயிலுக்கு முதலமைச்சரின் உதவி நிதி மற்றும் பிரதமர் பராமரிப்பு நிதி ஆகியவற்றிலிருந்து ஒரு கோடி 52 லட்சம் ரூபாய் உதவி கிடைத்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.